மலையேறுபவர்கள் விரும்புபவர்கள், மலையேற்ற பயிற்சிகள் மேற்கொள்ளும் நபர்கள் பயன்பெறும் வகையில், எளிதான, மிதமான மற்றும் கடினமான வகைகளில் 40 பாதைகளின் விரிவான பட்டியலை வனத்துறை உருவாக்கியுள்ளது. ஆன்லைனில் பணம் செலுத்துவதன் வாயிலாக இந்த பாதைகளில் மலையேற்றத்தை மக்கள் மேற்கொள்ள முடியும்.டிரெக் தமிழ்நாடு (Trek Tamil Nadu) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தை, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். தமிழ்நாடு வனத்துறை, தமிழ்நாடு வன அனுபவக் கழகம், மாநில அரசின் கூட்டு முயற்சியாக உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் www.trektamilnadu.com என்ற இணையதளத்தையும் அறிமுகம் செய்து வைத்தனர்.