சேலம் கோட்டை மைதானத்தில் சிபிஎஸ் திட்டத்தை (பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்) ரத்து செய்யக்கோரி, சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
மாநில ஒருங்கிணைப்பாளர் ராமாயி தலைமை வகித்தார். மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் மனோகர் வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வி நிறைவுரையாற்றினார். மாநில இணை ஒருங்கிணைப்பாளர் குமார் நன்றி கூறினார். இதில் துறைவாரி சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு சிபிசி ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என முழக்கமிட்டனர்.