கல்வராயன் மலை கரியாலூர் கோடை விழா திடலில் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கான சிறப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலை கரியாலூர் கோடை விழா திடலில் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கான சிறப்பு கலந்தாய்வு கூட்டம் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மலைவாழ் மக்கள் வாழ்வாதாரம் மேம்பட கூட்டுறவு வங்கி மூலம் கடன் பெற்று கைத்தொழில் மற்றும் சிறுதானியம் பயிரிடுவது குறித்து விளக்கம் அளித்தார்.
இந்நிகழ்வின் போது சட்டம் மற்றும் பயிற்சி இணை பதிவாளர் சாமுண்டீஸ்வரி, கள்ளக்குறிச்சி மண்டல இணை பதிவாளர் முருகேசன், துணைப் பதிவாளர் சுகந்த லதா, பழங்குடியினர் நலத்துறை கள்ளக்குறிச்சி மாவட்ட திட்ட அலுவலர் சுந்தரம், தனி வட்டாட்சியர் சத்யநாராயணன், விழுப்புரம் மாவட்டம் கூட்டுறவு வங்கி உதவி பொது மேலாளர் சுந்தர கணபதி, வெள்ளிமலை கூட்டுறவு வங்கி மற்றும் மோட்டாம்பட்டி கூட்டுறவு வங்கி செயலாட்சியர் சக்திவேல், கிளாக்காடு லேம்ப் செயலாட்சியர் ரா.சசிகலா, வெள்ளிமலை லேம்ப் செயலாளர் ராமர், மோட்டாம் பட்டி லேம்ப் குப்புசாமி, கல்வராயன் மலை ஒன்றிய குழு பெருந்தலைவர் சந்திரன் மற்றும் கூட்டுறவு சங்க ஊழியர்கள் இதில் கலந்து கொண்டனர்.