கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களை வணிக நோக்கத்திற்கு பயன்படுத்தினால் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தேநீர் கடைகள், உணவகங்கள், ஸ்வீட் ஸ்டால் மற்றும் உணவு பொருட்கள் தயார் செய்யும் நிறுவனங்களில் வர்த்தக பயன்பாட்டிற்கு விற்பனை செய்யப்படும் எரிவாயு உருளைகள் (சிலிண்டர்) 19 கிலோ கிராம் உடைய வணிக பயன்பாட்டு எரிவாயு உருளைகள் மட்டும் பயன்படுத்த வேண்டும்.
வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் எரிவாயு உருளைகள் (சிலிண்டர்) 14.2 கிலோ கிராம் கொண்டதை வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடாது என தெரிவிக்கப்படுகிறது. எனவே வணிகர்கள் மீறி வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் எரிவாயு உருளைகளை (சிலிண்டர்) பயன்படுத்தினால் அதனை பறிமுதல் செய்யப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.