கடலூர் மாவட்டத்தில் 10 லட்சம் பனை விதைகள் நடும் திட்டத்தை திட்டக்குடியில் அமைச்சர் கணேசன் துவங்கி வைத்தார்.
கடலூர் மாவட்டத்தில் 10 லட்சம் பனை விதைகளை நடவு செய்வோம் திட்டத்தின் கீழ், ஊரக வளர்ச்சி முகமை சார்பில் திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெலிங்டன் நீர் தேக்கத்தில் துவக்கி வைக்கப்பட்டது.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் உபரிநீர் வெளியேற்றும் செய்யும் வாய்கால் கரையோரம் பனை விதையை விதைத்து பணியை துவங்கினார்.
ஊரக வளர்ச்சி முகமை சார்பில் 7.50 லட்சம் பனை விதைகளும், வனத்துறை சார்பில் 2.50 லட்சம் பனை விதைகளை அனைத்து ஊராட்சிகளிலும் நடுவதற்கான பணிகளும் நடைபெறவுள்ளது.
நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் சரண்யா மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, வனத்துறை, நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
செய்தியளர்களிடம் பேசிய அமைச்சர் கணேசன், தமிழகம் முழுவதும் ஒரு கோடி பனை விதைகளை நட்டு ஒரு கோடி பனைமரம் வளர்க்கும் திட்டத்தின் கீழ், கடலூர் மாவட்டம் சார்பில் 10 லட்சம் பனை மரங்களை வளர்ப்பதற்காக இன்று திட்டக்குடி வெலிங்டன் நீர்த்தேக்க கரையில் பனை விதையை விதைத்துள்ளோம்.
தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் ஊரக வளர்ச்சி முகமை சார்பில் 7.50 லட்சம் பனை விதைகளும், வனத்துறை சார்பில் 2.50 லட்சம் பனை விதலைகளும் நடப்படும்.
மேலும் திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழ்ச்செருவாய் கிராமத்தில் அமைந்துள்ள வெலிங்டன் நீர்த்தேக்கம் நூறு ஆண்டு பழமை வாய்ந்த நீர் தேக்கம் இதில் 35 ஆயிரம் ஏக்கர் விவசாய விளைநிலங்களில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.
சுற்றுவட்டார கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வருவதால், இந்த நீர்த்தேக்கத்தை தூர் வருவதற்காக முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம் பரிந்துரை செய்யப்பட்டு விரைவில் அதற்கான பணிகளை துவங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
உடன் மாவட்ட கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி திட்ட இயக்குநர் சரண்யா, மங்களூர் ஒன்றிய பெருந்தலைவர் தொழிலாளர் நலவாரிய செயற்குழு உறுப்பினர் கே.என். டி. சங்கர், ஒன்றிய செயலாளர்கள் பட்டூர் அமிர்தலிங்கம், செங்குட்டுவன், நகர செயலாளர் பரமகுரு கடலூர் மேற்கு மாவட்ட அயலக அணி அமைப்பாளர் சேதுராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.