சேலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கும் 18 சதவீத இடஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு 3 சதவீதம் உள்இட ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்தரங்கம் நடைபெற்றது.
மாநில அரசு அருந்ததியர்களுக்கு 3 சதவீதம் உள்ஒட ஒதுக்கீடு வழங்கியது செல்லும் என சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், அருந்ததியர்களுக்கு வழங்கிய உள்இட ஒதுக்கீட்டில் ஒளிந்திருக்கும் சமூக அநீதி எனும் தலைப்பில், உள்இட ஒதுக்கீட்டிற்கு எதிரான கருத்தரங்கம் சேலம் அன்னதானப்பட்டியில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் புரட்சித் தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி, மக்கள் தேசம் கட்சி தலைவர் வழக்கறிஞர் ஆசைத்தம்பி, மண்ணின் மைந்தர்கள் தலைவர் சார்ப் அ.முரளி, மத்திய மாநில அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு செயலாளர் சரஸ்ராம்ரவி, அறிவுச் சமூகம் தலைவர் தமிழ் முதல்வன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்று பேசினார்கள். அப்போது அவர்கள், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் அருந்ததியர்களுக்கு உள்ஒட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது தவறானது என தெரிவித்தனர்.
இதில், புரட்சித் தமிழகம் கட்சி சேலம் மாவட்ட நிர்வாகிகள் ஆசைத்தம்பி, சிவா உள்பட 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.