உலக அளவில் 22 லட்சத்திற்கும் மேற்பட்டோருடன் ஓரே நேரத்தில் 15 நிமிடத்திற்கு கை தட்டி உலக சாதனை புரிந்துள்ளனர்.
லயன்ஸ் இன்டர்நேஷனல் சார்பிலும், மாவட்ட தலைவர் லயன் பி.வி. சுப்பிரமணி ஏற்பாட்டில் உலக சேவை தினத்தை முன்னிட்டும், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டும் ஒரே நேரத்தில் 15 நாடுகளை சேர்ந்த 15 லட்சம் மக்கள் ஒன்றிணைந்து ஜூம் ஆப் மூலம் உலக சாதனை செய்யும் விதமாக தொடர்ந்து 15 நிமிடங்களுக்கு கை தட்டும் லயன் கிளாப்பத்தான் நிகழ்ச்சி கொளத்தூர் ரெட்டை ஏரி ஸ்ரீ எம்.தசரத நாயுடு கஸ்தூரி மகாலில் நடைபெற்றது.
15 லட்சம் பேர் என இலக்கு நிர்ணயித்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில், ஜூம் ஆப் மூலம் மட்டுமே உலக அளவில் 22.83 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒன்றிணைந்து கலாம் உலக சாதனையை படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் தொலைக்காட்சி புகழ் மதுரை முத்து சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு நகைச்சுவையாக சிறப்புரையாற்றினார்.
மாவட்ட ஆளுனர் ஏ.டி. ரவிச்சந்திரன், முன்னாள் மாவட்ட ஆளுனர் வி.பஜேந்திரபாபு, முதல் நிலை ஆளுனர் பி.மணிசேகர், இரண்டாம் நிலை ஆளுனர் ஆர். நரசிம்மன், மாவட்ட நிர்வாகிகள் எழில்வளவன், சுதாகர், ராஜாராம், சி.ராஜேஷ், சங்கரி தனசேகர்ன், தனராஜூ, கே.சந்திரசேகர், வி.செல்வக்குமார், சுபஸ்ரீபாலு, ஜெயக்கொடி, ஜி.கண்ணன் உள்ளிட்ட லயன் மாவட்ட, மண்டல, வட்டார, சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
கலாம் வேர்ல்ட்டு ரிக்கார்டு நிறுவனர் டி.குமரவேல் பி.வி. சுப்ரமணிக்கு உலக சாதனைக்கான சான்றிதழை வழங்கினார்.
தொடர்ந்து 15 மண்டலத்தின் மூலம் சுய தொழிலுக்கான டிபன் சென்டர் வைக்க பாத்திரங்கள், காய்கறி, பழங்கள் விற்பனைக்காக ரூ.10,000 நிதியுடன் அதற்கான தள்ளுவண்டிகள், தொண்டு நிறுவனங்களுக்கும் பார்வை இழந்தவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் நலத் உதவிகள், தையல் மெஷின், மாணவ-மாணவிகளுக்கான கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட1,500 ஏழை எளியோர்களுக்கு ரூபாய் 10 இலட்சத்திற்கும் அதிகமான மதிப்பு கொண்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.