கும்பகோணத்தில் பெயிண்டர்கள் மற்றும் அமைப்பு சாரா நல சங்கதின் முப்பெரும் விழா நடைபெற்றது.
கும்பகோணத்தில் அனைத்து பெயிண்டர்கள் மற்றும் அமைப்பு சாரா நல சங்கம் சார்பில் மாவட்ட ஆலோசனை கூட்டம், புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல், தீபாவளி பண்டிகை முன்னிட்டு உறுப்பினர்களுக்கு ஆடை மற்றும் இனிப்புகள் வழங்குதல் என முப்பெரும் விழா அனைத்து பெயிண்டர்கள் அமைப்புசாரா நல சங்க அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் சபி சரவணன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மறைந்த நிர்வாகி துரை உருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை மற்றும் மற்றும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு புத்தாடை இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் செயலாளர் கோசி வெங்கடேசன், பொருளாளர் ஜான் பிரிட்டோ, ஆலோசகர் சண்முகம், துணைத் தலைவர் ஜெகநாதன், துணைச் செயலாளர்கள் சரவணன், மருதையன், கௌரவத் தலைவர் மோகன், ஒன்றிய கௌரவத் தலைவர் நடராஜன், ஒன்றிய துணைச் செயலாளர் தர்மராஜன், ஒன்றிய துணைத் தலைவர் செல்லப்பாண்டி, நிர்வாகிகள் ரகு, சுரேஷ், பிரகாஷ், ஸ்டாலின், மணிகண்டன், செல்வம், ஐயப்பன், ராஜ்குமார், சித்தி விநாயகம், ராஜேஷ் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.