சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பச்சனம்பட்டியை சேர்ந்த ராஜா மனைவி அமுலு (வயது 36). இவர் சேலம் மாவட்ட ஆட்சியரகம் வந்தார். பின்னர் அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் தரையில் அமர்ந்து தீடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அமுலு ஓமலூர் அருகே உள்ள பச்சனம்பட்டி கிராமத்தில் நத்தம் புறம்போக்கு நிலத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி வசித்து வருதாகவும், இருகுழந்தைகள் உள்ள நிலையில், தனி நபர்கள் சிலர் அந்த வீட்டில் குடியிருக்க விடாமல் தொடர்ந்து பணம் கேட்டு இடையூறு செய்து வருகின்றனர்.
மேலும் அவர்களின் தூண்டுதலின் பேரில் ஓமலூர் வட்டார வளர்ச்சி அலுவலர், ஓமலூர் காவல்துறையினர் வீட்டை காலி செய்யுமாறு மிரட்டுவதாகவும் கூறிய அவர், வேறு வழியின்றி தர்ணாவில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.