திருவாரூர் தனியார் அரங்கில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் கிருபானந்தம் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற மாநில பொதுச் செயலாளர் இரா.தாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, தமிழக அரசு 3 சதவீத அகவிலைப்படி உயர்த்தியமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதன் காரணமாக ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.
இது குறித்து அறிந்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், உடனடியாக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கியற்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தார்.
மேலும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சரண்டரை தீபாவளிக்குள் வழங்க வேண்டும். இதேபோன்று பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.