புதுச்சேரி உப்பளத்தில் உள்ள அரசு உதவி பெறும் இமாகுலேட் பெண்கள்
மேனிலைப்பள்ளி வளாகத்தில் அறிவியல் மற்றும்
பல்திறன் கண்காட்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி-
கடலூர் உயர்மறை மாவட்டப் பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் கலந்து
கொண்டு பல்திறன் கண்காட்சியை திறந்து வைத்தார். புதுச்சேரி மாவட்ட
ஆட்சியர் குலோத்துங்கன் கலந்துகொண்டு பள்ளியில் பிரம்மாண்டமாக
உருவாக்கப்பட்டிருந்த விண்கலத்தைத் திறந்து வைத்து மாணவிகளின்
படைப்புகளைப் பார்வையிட்டார்கள்.
இதில் சுமார் 3000-க்கு மேற்பட்ட படைப்புகளை மாணவிகள் காட்சிக்கு
வைத்திருந்தனர். தமிழ், பிரெஞ்ச், ஆங்கிலம், கணிதம், சமூக அறிவியல்,
இயற்பியல், வேதியல், உயிரியல், கணிணி அறிவியல், வணிகவியல்,
கணக்கியல். பொருளாதாரம், விளையாட்டு, ஓவியம், கைவினைக் கலை
மற்றும் பாரம்பரியக் கலைகள் என பல்வேறு அரங்குகள்
அமைக்கப்பட்டுள்ளன.இதில் விண்வெளி அரங்கு அனைவரையும்
வெகுவாகக் கவர்ந்தது.முழுவதும் குளிர்யூட்டப்பட்ட இந்த அரங்கில்
இருக்கும் மாணவிகள் பார்வையிட வருபவர்களுக்கு
விண்வெளி ஆராய்ச்சி குறித்து விளக்கம் அளிக்கின்றனர்..
மேலும் தமிழ் அரங்கில் வரலாற்று சம்பவம்,நன்னெறி கதை ஆகியவற்றை
விளக்கும் அரங்குகள் கண்கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன
இப்பல்திறன் கண்காட்சியினை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்
பார்வையிட்டு ரசித்தனர்.