பிரபல யூடியூபரான இர்பான் அண்மை காலமாக சர்ச்சையில் சிக்கி வருகிறார். ஏற்கவே தனது மனைவியின் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை வெளிநாட்டிற்கு சென்று கண்டறிந்த விவகாரத்தில் விசாரணைக்கு ஆளாக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது மற்றொரு சர்ச்சை செயலில் ஈடுபட்டுள்ளார். இர்பான் யூடியூப் சேனலில் புதிய வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது.
அதில் தனது மனைவிக்கு குழந்தை பிறந்தது தொடர்பானவை தொகுத்து வழங்கி இருந்தார். அதில் இர்பான் தனது மனைவி பிரசவ வலியால் துடிக்கும் காட்சியையும், அப்போது குழந்தையை தனது கையில் வாங்கி, தொப்புள் கொடியை வெட்டுவது காட்சி படுத்தப்பட்டது தற்போது வைரலாக பரவி உள்ளது. இந்த வீடியோவை இதுவரை 15 லட்சம் பேர் பார்த்துள்ளனா்.
தமிழ்நாடு மருத்துவ சட்டத்தின்படி இது தவறானது என்று மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், பயிற்சி பெற்ற மருத்துவர்கள் தான் இதை செய்ய வேண்டும் என்றும், தொப்புள் கொடியை இர்பான வெட்டுவது தனிநபர் உரிமையை மீறும் செயல் என்றும், மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.