திட்டக்குடி அருகே தனியார் பள்ளிப் பேருந்துகள் மோதி
விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த பாசாரில் தனியார் பள்ளி இயங்கி
வருகிறது. இந்தப் பள்ளியின் பேருந்து ஒன்று, மங்களூர் பகுதியிலிருந்து
நேற்று காலை பள்ளி மாணவர்களை அளவுக்கு அதிகமாக ஏற்றிக்கொண்டு
அதிக வேகத்தில் சென்று கொண்டிருந்தது.
அப்போது அதே பள்ளியின் மற்றொரு பேருந்து, பின்னால் சிறுவர்களை
ஏற்றிச்சென்றது. இந்த இரண்டு பேருந்துகளும் போட்டி போட்டுக்கொண்டு
முந்திச் செல்ல முயன்றதால் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பள்ளி சிறுவர்கள், மாணவர்கள் என 10 பேர் சிறிய காயங்களுடன்
வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சையாக அழைத்துச்
செல்லப்பட்டனர்.
இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.