இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட்
இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரில் நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்டம் நேற்று மழையால் தொடங்கவே இல்லாத நிலையில், இரண்டாவது நாளான இன்று டாஸ் போடப்பட்டு ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்வதாக அறிவித்தது.இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி, ரோகித் சர்மா & ஜெய்ஸ்வால் ஆட்டத்தை தொடங்கினர்.
ரோகித் சர்மா சவுதி பந்தில் போல்டானார். அவர் 16 பந்துகளில் 2 ரன்களுடன் போல்டாகி வெளியேறினார்.பிறகு களமிறங்கிய விராட் கோலி டக் அவுட்டாகி வெளியேறினார்.இதையடுத்து, இந்திய அணிக்காக
ஒரு வீரம் இன்று தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை இதானால் இந்திய அணி 46 ரன்களுக்கு 1௦ விக்கெட்களையும் இழந்தது. தற்போது நியூசிலாந் அணி ஆட்டத்தை தொடர்கிறது