சூர்யாவின் 45வது படத்தின் அறிவிப்பு வெளியானது. ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிக்க ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யாவின் 45வது படம் தயாராக இருப்பதாக அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் சூர்யாவின் 45வது படத்தின் பெயர் கருப்பு என ஒரு தகவல் இணையத்தில் வலம் வருகிறது.
ஏற்கனவே சிறுத்தை சிவா அவர்களின் இயக்கத்தில் சூர்யா, பாலிவுட் நடிகை திஷா பதானி முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் இறுதியில் நடக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த தலைப்பு செய்தி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதகரித்துள்ளது.