சிவாஜி கணேசன் திரைப்படங்களில் மட்டுமல்ல நிஜத்திலுமே அவர் நாட்டுப்பற்றுக் கொண்டவர் என இயக்குனர் பாக்யராஜ் தெரிவித்தார்.
அகில இந்திய சமூக நல அமைப்பின் வெள்ளி விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது. இதன் நிறுவனரான இயக்குனர் பாக்யராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
பின்னர் அவர் பேசியதாவது :
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் படப்பிடிப்புகளில் நேரத்தை முறையாக கடைபிடிப்பார். ஒருமுறை ஏழு முப்பதுக்கு படப்பிடிப்பு துவங்கும் என நடிகர் திலகத்திடம் அறிவித்திருந்தேன். ஆனால் அதற்கு முன்னதாகவே சில காட்சிகளை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது வந்த நடிகர் சிவாஜி தன் வருவதற்கு முன் ஏன் படபிடிப்பை துவங்கினீர் என்று கேட்டார். நான் பொதுக் காட்சிகளை தான் எடுத்தேன் என்று கூறியபோது சிவாஜி கணேசன் கோபப்பட்டார். 500க்கும் மேற்பட்டோர் உள்ள இந்த இடத்தில் சிவாஜி கணேசன் நேரம் கடந்து வருவதாக தான் நினைப்பார்கள் என சத்தம் போட்டார்.
அடுத்த நாள் 7:10 மணிக்கு அவர் வந்து விட்டர். காரணம் கேட்டதற்கு சிவாஜிகணேசன் முன்பே வந்து விட்டார். இயக்குனர் நேரம் தவறி வந்ததாக மக்கள் பேசிக் கொள்வார்கள் என குழந்தையை போல கூறினா.
நீதிமன்ற காட்சி எடுக்கும் போது நீதிமன்ற செட் உண்மையாக இருப்பதாக சிவாஜி கூற,
அண்ணே இது உண்மையாலுமே நீதிமன்றம் தான். இது கோபி நீதிமன்றம் என்று நான் கூறிய பொழுது ஆவேசப்பட்டு நீதிபதி இருக்கையில் உட்கார்ந்து இருந்த ஜூனியர் நடிகர் வேகமாக எழுப்பினார். நீதிபதி என்பது ஒரு கடவுள் மாதிரி. அவரது இருக்கையை மதிக்க வேண்டும் என கூறி அவர் எழுப்பி அனுப்பினார். திரைப்படங்களில் மட்டுமல்ல நிஜத்திலுமே அவர் நாட்டுப்பற்றுக் கொண்டவர்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் இயக்குனர் பாண்டியராஜ், கானொலி தொகுப்பாளர் சாகுல் அமீத் உட்பட பலரும் பங்கேற்றனர்.