விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக் கோட்டையின் வரலாற்றுச் சிறப்புகளை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், இந்திய தொல்லியல் துறை கூடுதல் இயக்குநர் பொது ஜான்விச் ஷர்மா ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி தலைமையில் நேரில் ஆய்வு செய்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில், செஞ்சி அதன் செஞ்சிக்கோட்டைக்கு பிரபலமானது. செஞ்சிக்கோட்டை மிகவும் பழமை வாய்ந்த ஒன்றாகும். இப்பகுதி பொதுமக்கள் மட்டுமல்லாமல் பல்வேறு வெளிநாட்டவர் மற்றும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இக்கோட்டையின் வரலாற்றுச்சிறப்புகளை பார்வையிட்டுச் செல்லும் வழக்கம்.
செஞ்சியில் உள்ள கோட்டை 13-ம் நூற்றாண்டில் சோழ வம்சத்தால் கட்டப்பட்டது. 1638-ல், செஞ்சி விஜயநகரில் இருந்து பிஜப்பூர் சுல்தானகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. 1677-ல் மராட்டிய மன்னர் சிவாஜியின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1690-ல் முகலாயரின் கீழ் மாறியது. அதன் பின்னர் 1750-ல் ஆற்காட்டின் தலைமையிடமாக கொண்டு பிரெஞ்சுக்காரர்களிடம் கை மாறியது, பின்னர் 1762-ல் ஆங்கிலேயர்களிடம் கை மாறியது.
இங்கு காணப்படும் மூன்று மலைகளில் உள் கோட்டையும், கீழ் கோட்டையும் கொண்ட ராஜகிரி மலையே உயர்ந்ததாகும். இதை கோனார் வகுப்பை சேர்ந்த ஆனந்த கோன் என்பவர் கி.பி. 1200- ம் ஆண்டு கட்டினார். இந்த ராஜாகிரி கோட்டையானது 800 அடி உயர்ந்து காணப்படுகிறது. இங்கு மேல் கோட்டையானது 3 பக்கமும் உயர்ந்த மலைகளால் சூழப்பட்டுள்ளதாலும் நான்காம் பக்கம் பெரிய பள்ளம் உள்ளதாலும் யாராலும் எளிதில் அங்கு செல்ல முடியாது.
ஆனந்தகிரி என்ற பெயர் பெற்ற இந்த மலையை நாயக்கர் மன்னர் கிருஷ்ணப்ப நாயக்கர் என்பவர் ராஜாகிரி என பெயரிட்டார்.
பாரம்பரியம் மிக்க கோட்டைகளை சுற்றுலாத்தளமாக மாற்றும் நடவடிக்கையில் யுனஸ்கோ செயல்பட்டு வருகிறது. இதில் 11 பாரம்பரியமிக்க கோட்டைகள் மகாராஷ்டிராவில் இடம்பெற்றுள்ளது. அதில் தமிழ்நாட்டில் செஞ்சிக்கோட்டையும் ஒன்றாகும்.
அந்த வகையில், செஞ்சிக்கோட்டையினை பாரம்பரியமிக்க சுற்றுலாத்தலம் கோட்டையாக மாற்றிடும் வகையில் இந்திய தொல்லியல் முறை சார்பில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.செஞ்சி கே.எஸ்.மஸ்தான், இந்திய தொல்லியல் துறை கூடுதல் இயக்குநர் பொது ஜான்விச் ஷர்மா ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
செஞ்சிக்கோட்டையினை பாரம்பரியமிக்க சுற்றுலாத்தளமாக மாற்றிடும் வகையில், இக்கோட்டையினை ஆய்வு மேற்கொள்ளும் பொருட்டு மாநில மற்றும் ஒன்றிய அரசின் சார்பில் குழு அமைக்கப்படவுள்ளது.
இக்குழுவானது அடுத்த மாத இறுதியில் செஞ்சிக்கோட்டைக்கு வருகைபுரிந்து இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களிடம் கருத்து கேட்கும் பணிகளில் ஈடுபடவுள்ளனர்.
மேலும், செஞ்சிக்கோட்டையினை நாளொன்றுக்கு 5000 சுற்றுலா வாசிகள் வருகை புரிந்து பார்வையிட்டு, பயன்பெறும் வகையில், குடிநீர் வசதிகள், கூடுதல் மின்வசதிகள், குழந்தைகளுக்கான விளையாட்டு வசதிகள், பொழுது போக்கு வசதிகள் உள்ளிட்டவை ஏற்படுத்துவது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், இக்கோட்டையினை மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளும் பார்வையிட வேண்டும் என்ற நோக்கதில் ரோப் கார் வசதி வேண்டி நிதி ஒதுக்கீடு குறித்து அரசுக்கு அனுமதி கோரப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், திண்டிவனம் சார் ஆட்சியர் .திவ்யான்ஷு நிகம், செஞ்சி ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் விஜயகுமார், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் கே.எஸ்.எம்.மொக்தியார் அலி, செஞ்சி வருவாய் வட்டாட்சியர் ஏழுமலை, மண்டல இயக்குநர் பதேக், செஞ்சி பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.