திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாசிச பாஜக அரசை கண்டித்து, தி.மு.க. தணிக்கைக்குழு உறுப்பினர் கு.பிச்சாண்டி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆணையையேற்று, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வழிக்காட்டுதலின்படி, நேற்று திருவண்ணாமலை, அண்ணா சிலை அருகில் திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்ட திமுக சார்பில், ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாசிச பாஜக அரசை கண்டித்து, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. தணிக்கைக்குழு உறுப்பினர் கு.பிச்சாண்டி தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன், தி.மு.க. மருத்துவர் அணி துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், தெற்கு மாவட்ட தி.மு.க. அவைத் தலைவர் கோ.கண்ணன், வடக்கு மாவட்ட தி.மு.க. அவைத் தலைவர் ஆர்.ராஜசேகர், சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், எஸ்.அம்பேத்குமார், ஒ.ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கொளுத்தும் வெயிலிலும், 10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பல்வேறு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. தணிக்குழு உறுப்பினர் கு.பிச்சாண்டி, வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன். எம்.பி., தி.மு.க. மருத்துவர் அணி துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் ஆகியோர் கண்டன உரையை நிகழ்த்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், மாநில பொறியாளர் அணி செயலாளர் கு.கருணாநிதி, தலைமை மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், மாவட்ட துணை செயலாளர் ப்ரியா ப.விஜயரங்கன், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், தெற்கு, வடக்கு மாவட்ட அமைப்பாளர்கள் டி.வி.எம்.நேரு, மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் கிளைக்கழக நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், வட்டக் நிர்வாகிகள் மற்றும் தி.மு.க. முன்னோடிகள் என பலர் கலந்து கொண்டனர்.