கடலூர் துறைமுகம் அஐந்து கிணற்று மாரியம்மன் கோயிலில் செடல் பிரமோற்சவத்தை முன்னிட்டு நேற்று திருவிழா கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாரதணை நடந்தது. பின்னர் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு அம்மனுக்கு சிவலிங்க பூஜை செய்யப்பட்டு அம்மன் அலங்காரத்துடன் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வானவேடிக்கையுடன் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை உபயோதாரர்கள் கணேசன், உதயவேலு, சௌந்தர்ராஜன், ராஜ்குமார், பரிமளன் சரவணன் என்கிற கந்த பெருமாள் சதீஷ் செயல்அலுவலர் மகேஷ், ஆய்வர் பரமேஸ்வரி மற்றும் ஊர் பொதுமக்கள், கோயில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.