திருவண்ணாமலை தரமற்ற உணவு விநியோகிக்கப்பட்ட 4 உணவகங்களுக்கு, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அபராதம் விதித்தனர்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கரபாண்டியன் உத்தரவின்பேரில், திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன் சாலையோர பகுதிகளில் உள்ள 9 உணவகங்களில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ராமகிருஷ்ணன் வழிகாட்டுதலின்பேரில், உணவு பாதுகாப்பு அலுவலர் எழில் பிச்சைராஜா மற்றும் அதிகாரிகள் 9 உணவகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது 4 உணவகங்களில் தரமற்ற உணவு பொதுமக்கள் மற்றும் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து, 4 கடைகளுக்கு மொத்தம் ரூ.4000 அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு தரமான உணவு வழங்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தியதோடு, தொடர்ந்து உணவகங்களில் ஆய்வு நடத்தப்படும். உணவகங்கள் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும், என கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தினர்.