புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை கடத்திய 2 வாலிபர்களை திண்டிவனத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் சென்னை – புதுச்சேரி சாலை மற்றும் பல்வேறு இடங்களில் சப் இன்ஸ்பெக்டர்கள் சந்திரசேகரன், சுதன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ்பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்களை சந்தேகத்தின்பேரில் மடக்கி பிடித்து அவர்களிடமிருந்த பையை சோதனை செய்தனர்.
அதில் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான புதுச்சேரி மது பாட்டில்கள் இருந்தது. இதனையடுத்து நடத்திய விசாரணையில், அவர்கள் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கிளாந்தாங்கல் பகுதியை சேர்ந்த சந்தோஷ் (20), தனசேகர் (28) ஆகியோர் என்பதும். இவர்கள் விற்பனைக்காக புதுச்சேரியில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு மது பாடல்களை கடத்தி சென்றதும் தெரிய வந்தது.
இதனையடுத்து இருவர் மீது வழக்கு பதிவு செய்து, அவர்கள் வைத்திருந்த ரூ.30 ஆயிரம் மதிப்பிலான புதுச்சேரி மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.