திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வள்ளிப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று பள்ளி வகுப்பறையில் மாணவர்களின் நடத்தையில் சந்தேகம் ஏற்படவே வகுப்பு ஆசிரியர் மாணவர்களின் பையை சோதனையிட்டுள்ளார்.
அப்போது சில மாணவர்களிடம் இருந்து சிறிய வெள்ளை நிற பையில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் இதனை வகுப்பறையில் பயன்படுத்தியதாக 7 மாணவர்கள் கடந்த ஒரு வாரமாக பள்ளியில் இருந்து இடைநீக்கம் ( `சஸ்பென்ட்’ ) செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் தேவன் நிருபர்கள்களிடம் பேசுகையில், மாணவர்கள் பயன்படுத்தியது கஞ்சா இல்லை, ஹேன்ஸ் போன்ற புகையிலைப் பொருள். இதனை அவர்களிடமிருந்து கைப்பற்றியது உண்மைதான். இதுகுறித்து ஏழு மாணவர்கள் கடந்த ஒரு வாரமாக பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர், என்றார்.
பள்ளி மாணவர்களிடையே போதை பொருள் கலாச்சாரம் பெருகி வருவது அப்பகுதியில் பெற்றோரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.