செய்யாறு மினி ஸ்டேடியத்தில் ரூ. 80 லட்சத்தில் புனரமைக்கப்பட்ட 400 மீட்டர் ஓடுதளத்தை சார் ஆட்சியர் பல்லவிவர்மா திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மினி ஸ்டேடியத்தில் தனியார் பங்களிப்புடன் ரூ. 80 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்ட 400 மீட்டர் ஓடுதளத்தை செய்யாறு சார் ஆட்சியர் பல்லவிவர்மா திறந்து வைத்து ஒட்ட பந்தய போட்டிகளை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். 32 அணிகள் பங்கேற்ற வாலிபால் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பைகள் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு அலுவலர் பாலமுருகன், செய்யாறு டி.எஸ்.பி. சின்னராஜ், காவல் ஆய்வாளர் ஜீவராஜ் மணிகண்டன், செய்யாறு செஸ் டெவலப்பர்ஸ், லோட்டஸ் புட்வேர் எண்டர்பிரைசஸ், ஈஸ்ட் விண்ட் ஃபுட்வேர் நிர்வாகிகள் கோட்டா ராஜசேகர், மணிமாறன், கல்யாண சுந்தரம் மற்றும் நிர்வாகிகள் உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.