திருவண்ணாமலையில் பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு நாளையோட்டி
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெறுகிறது.
திருவண்ணாமலையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 55வது நினைவு நாள் அமைதி ஊர்வலம் நடைபெறுகிறது.பிப்ரவரி 3 ஆம் தேதி சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு, பேரறிஞர் அண்ணாவின் 55ஆம் ஆண்டு நினைவு நாள் அமைதி ஊர்வலம், நகர திமுக சார்பில் நடைபெற உள்ளது. திருவண்ணாமலை காந்தி சிலை அருகில் இருந்து நடைபெறவுள்ள அமைதி ஊர்வலத்திற்கு பொதுப்பணித்துறை அமைச்சரும், கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான எ.வ.வேலு தலைமையில் நடைபெறுகிறது.
அமைதி ஊர்வலத்திற்கு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட அவைத்தலைவர் த.வேணுகோபால், கழக மருத்துவர் அணி துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், கழக பொறியாளர் அணி செயலாளர் கு.கருணாநிதி, தலைமை செயற்குழு உறுப்பினர் பொன்முத்து, மாவட்ட துணை செயலாளர் மு.பெ.கிரி எம்.எல்.ஏ. தலைமை செயற்குழு உறுப்பினர் பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ, மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், மாவட்ட துணை செயலாளர்கள் ப்ரியா ப.விஜயரங்கன், விஜயலட்சுமி ரமேஷ்,
ஒன்றிய செயலாளர்கள் மெய்யூர் சந்திரன், த.ரமணன், பெ.கோவிந்தன், சி.மாரிமுத்து, பா.ராமஜெயம், நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், ஒன்றியக்குழு தலைவர்கள் கலைவாணி கலைமணி, பரிமளா கலையரசு ஆகியோர் முன்னிலையில் நடைபெறுகிறது.
அமைதி ஊர்வலத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகளும், கிளைக்கழக நிர்வாகிகளும், அணி சார்ந்த அமைப்பின் நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் கழக முன்னோடிகள் பெருந்திரளாக கலந்து கொள்கிறார்கள்.
அமைதி ஊர்வலத்திற்கான ஏற்பாட்டினை நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன் செய்து வருகிறார்.