பொங்களுக்கு வந்த பொதுமக்கள் என்னை திட்டி தீர்த்தனர்.
திட்டபணிகளை கொடுக்காததால் தலைவரிடம் வாக்குவாதம்அணைக்கட்டு, பிப்.1- பள்ளிகொண்டா பேரூராட்சியில் கவுன்சிலர் கூட்டத்தில் 1வது வார்ட் கவுன்சிலரை புறக்கணிப்பதாக கூறி தலைவரிடம் வாக்குவாதம்.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுக்காவில் பள்ளிகொண்டா பேரூராட்சி உள்ளது. ஒவ்வொரு மாதமும் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் கட்டமைப்புகள் மேற்கொள்வது தொடர்பாக கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, பள்ளிகொண்டா பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் நேற்று பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது .
கூட்டத்திற்கு பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி தலைமை தாங்கினார், தலைவர் சுபபிரியா முன்னிலை வகித்தார்.
1வது வார்ட் கவுன்சிலராக சத்தியகுமார் உள்ளார். இவர் பேசியது. கவுன்சிலர் கூட்டம் மட்டும் இல்லாமல் திட்டபணிகளிலும் என்னை புறக்கணித்து வருவதாகவும், எல்லா நேரங்களிலும் என்னை புறக்கணிக்கின்றனர்.
என்னை ஒதுக்கு கின்றீர்கள் என ஆதங்கமாக தலைவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டார். இதனால் என்னை நம்பி ஓட்டு போட்ட மக்களுக்கு என்னால் எதுவும் செய்ய முடியாமல் மனவேதனையுடன் இருக்கின்றேன் இந்நிலையில் கடந்த பொங்கலுக்கு வாழ்த்து சொல்ல வந்த அனைவரும் என்னை திட்டி தீர்த்து சென்றனர்.
நான் மனவேதனையுடன் இருந்து வருகின்றேன். மீண்டும் என்னை புறக்கனித்தால் நான் கூட்டத்தை புறக்கணித்து செல்வேன் என்றும் இரு கைகளை கட்டி கொண்டு தலைவரிடம் கேட்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டது. இதனை தொடர்ந்து அணைத்து கவுன்சிலர்களும் எங்கள் வார்ட்டில் பணிகள் செய்ய முடியாமல் தவித்து வருகின்றோம் என தெரிவித்தனர்.
அம்ரூத் திட்டத்தின் கீழ் பேரூராட்சியில் நடைபெற்று வரும் குடிநீர் பைப்லைன் அமைப்பதற்கு தோண்டப்பட்ட பள்ளத்தால் பொதுமக்கள் சிரமத்திற்க்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் பணிகள் முடிந்த இடங்களில் சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என அனைத்து கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
தெருவிளக்குகள் அமைக்காமல் உள்ளது கடந்த 3 மாதமாக கேட்டு வருகின்றேன். ஆனால் தற்போது வரை பொருத்தாமல் உள்ளது என்றும் குடிநீர் மற்றும் கழிவுநீர் பிரச்சனை இருந்து வருகின்றது. என அனைத்து வார்ட் கவுன்சிலர்களும் கோரிக்கை வைத்தனர்.பேரூராட்சி பணியாளர்கள் உட்பட அனைத்து வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.