விழாவிற்கு பள்ளி தாளாளர் எம். செந்தில்குமார் தலைமை வகித்து அனைவரையும் வரவேற்றார்.
பள்ளி நிர்வாக உறுப்பினர்கள் வாணி செந்தில் குமார்,பயாஸ் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி நிர்வாக இயக்குனர் ஷபானா பேகம் ஆண்டு அறிக்கை வாசித்தார்.
நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு 10வது மற்றும் 12ம் வகுப்பு அரசு பொது தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.தொடர்ந்து மாணவர்களின் கலை மற்றும் கராத்தே சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இன்நிகழ்ச்சிகள் கூடியிருந்தவர்களை வெகுவாக கவர்ந்தது.

விழாவில் பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளர் ஹாஜிரா இராம், ஷீபா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.முடிவில் பள்ளியின் நிர்வாக முதல்வர் சத்தியகலா நன்றி கூறினார்.