மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது
சென்னை மாநகராட்சி 11 வார்டு முதல் 48வது வார்டு வரை உள்ள மாநகராட்சி பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகள் சுற்றுப்புறமும் வகுப்பறைகள் மற்றும் கழிவறைகள் ஆகிய சுத்தம் செய்ய 110 பணியாளர்களை தற்காலிகமாக தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம் பணியமர்த்த தீர்மானம் உள்ளிட்ட 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சென்னை மாநகராட்சி மண்டலங்களில் தெருவிளக்கு பராமரிப்பு ஒப்பந்தத்திற்கான டெண்டர்களை 30 மாத காலத்திற்கு நிர்வாக அனுமதி கோரப்பட்ட தீர்மானத்திற்கு மாமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அந்த ஒரு தீர்மானம் மட்டும் அடுத்த மாமன்ற கூட்டத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
மாமன்ற கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் அவர்களின் வார்டுகளில் உள்ள குறைகளை மாநகராட்சி மேயரிடம் தெரிவித்தனர். மேயர் மற்றும் ஆணையர் கலந்தாலோசித்து அனைத்து குறைகளும் தீர்க்கப்படும் என தெரிவித்திருந்தார்.