எருது விடும் திருவிழாவில் மாடு முட்டி சிகிச்சை பெற்றுவந்த வாலிபர் உயிர் இழப்பால் குடும்பத்தினர் சோகம்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பெருமாபட்டு கிராமத்தில் ஊர் பொதுமக்கள் மற்றும் கிராம இளைஞர்கள் முன்னிலையில் கடந்த 27ஆம் தேதி எருது விடும் திருவிழா நடைபெற்றது.
இந்த எருது விடும் திருவிழாவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் மற்றும் ஊர்பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அப்போது பூங்குளம் அடுத்த பரவகுட்டை பகுதியைச் சேர்ந்த ரவி மகன் கேசவன் வயது (23) என்பவரை சீறிப்பாய்ந்து ஓடிய மாடு முட்டியதில் பலத்த காயம் அடைந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர்.
பின்னர் பரிசோதித்த மருத்துவர்கள் பலத்த காயம் அடைந்துள்ளார் என்று கூறியதால்
குடும்பத்தினர் மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் சிகிச்சையில் இருந்த கேசவன் இன்று உயிரிழந்தார் எருது விடும் திருவிழாக்கு சென்று மாடு முட்டி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.