கலசப்பாக்கத்தில் பாரதிய ஜனதா சார்பில் அண்ணாமலை என் மண் என் மக்கள் நடை பயணம்
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் நடைபயணம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கலசப்பாக்கத்தில் நடைபயணத்தை தொடர்ந்தார்.
அப்போது அவர் பேசும் பொழுது, சாதி, மதம் இல்லாத அரசியலை செய்து வருகிறோம், வாரிசு அரசியல் இல்லை, பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 57 ஆயிரம் பயனாளிகளுக்கு வீடு வழங்கி உள்ளோம், 5 லட்சம் மதிப்பில் மருத்து காப்பீடு வசதியினை ஏற்படுத்தி உள்ளோம், 15 தவணையாக விவசாயிக்கு 30 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தி உள்ளோம், என பல்வேறு நலத்திட்டங்களை மத்திய மோடி அரசு செய்து உள்ளது.
வருகின்ற நாடளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் பாரதீய ஜனதா அரசுக்கு ஆதரவு தர வேண்டும் என்று பேசினார். இந்நிகழ்ச்சியில் மாநில நிர்வாகி கார்த்தியாயினி, மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், மற்றும் ரமேஷ், நேரு, ஆகியோர் கலந்து கொண்டனர்.