கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், நபார்டு வங்கி சார்பாக, நடமாடும் கிராமிய அங்காடி திட்டத்தின் கீழ், மதுரம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு ரூ.5 இலட்சத்து 44 ஆயிரம் மதிப்பில் நிதி உதவியுடன் பெறப்பட்ட நடமாடும் மொபைல் வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் இன்று (29.01.2024) கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப, அவர்கள் தெரிவித்ததாவது:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், படப்பள்ளி கிராமத்தில் இயங்கி வரும், மதுரம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு, நபார்டு வங்கியின் சார்பாக, நடமாடும் கிராமிய அங்காடி திட்டத்தின் கீழ், நிதி உதவியுடன், ரூ.5 இலட்சத்து 44 ஆயிரம் மதிப்பில் நடமாடும் மெபைல் வாகனம் இன்று (29.01.2024) வழங்கப்பட்டுள்ளது.
இந்த வாகனத்தின் மூலம் விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல், பருத்தி, நிலக்கடலை மற்றும் சிறு, குறு தானியங்கள், நேரடி கொள்முதல் செய்து நல்ல விலைக்கு விற்பனை செய்து லாபம் பெறுவதற்க்கு உதவியாக இருக்கும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் திரு.பூபதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திரு.சீனிவாசன், வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை துணை இயக்குநர் திரு.காளிமுத்து, நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் திரு.சி.ரமேஷ், உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.