தற்செயல் விடுப்பு வேண்டி வட்டாட்சியரிடம் மனு
தமிழக அளவில் பழைய ஓய்வு ஊதியம் வேண்டி ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தும் முடிவின்படி சி.பி.எஸ் ஒழிப்பு இயக்கம் அனைத்து அரசு ஊழியர்கள் சங்கம் இணைந்து போராட்ட தினமான 30-01-2024, 31-01-2024 ஆகிய இரு தினங்களுக்கு தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெறுகிறது இதில் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தின் மாநில முடிவின்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் கலந்து கொள்வதை முன்னிட்டு தற்செயல் விடுப்பு கடிதத்தை வந்தவாசி வட்டாட்சியர் பொன்னுசாமி அவர்களிடம் மாநில துணைத்தலைவர் பிரபாகரன் வழங்கினார் , மாவட்ட பொருளாளர் பிரகாஷ் வட்ட செயலாளர் மதனகோபால் உடனிருந்தனர்.