மகாத்மா காந்தி நினைவு நாளை முன்னிட்டு சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக சார்பில் மத நல்லிணக்க உறுதிமொழி
கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக சார்பில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் முன்னிலையிலும், சென்னை வடகிழக்கு மாவட்ட கழக செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ்.சுதர்சனம் தலைமையிலும் மத நல்லிணக்க உறுதிமொழி மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே நடைபெற்றது.
திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர், மாதவரம் தொகுதி பார்வையாளர் ந.சந்திரபாபு, அவைத்தலைவர் குறிஞ்சி கணேசன், ராமகிருஷ்ணன், அறிவழகி, மண்டலக் குழுத் தலைவர் நந்தகோபால், பகுதி செயலாளர்கள் ஜி.துக்காராம், புழல் எம்.நாராயணன், தி.மு. தனியரசு, மை.அருள்தாசன், ஒன்றிய செயலாளர்கள் வழக்கறிஞர் புழல் பெ.சரவணன், மீ.வே.கர்ணாகரன், மோரை கோ.தயாளன், மாவட்ட கவுன்சிலர் மோரை மு.சதிஷ்குமார் உள்ளிட்ட மாநில – மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள், இளைஞர் அணி, மகளிர் அணி நிர்வாகிகள், நிர்வாகிகள், மற்றும் அணிகளின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் இணைந்து உறுதிமொழி ஏற்றனர்.