மருத்துவமனையில் உறவினர்கள் முற்றுகை
விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்த பெண் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் மருத்துவமனையில் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் அருகே உள்ள அரியலூர் திருக்கை நகரை சேர்ந்தவர் ஜெனிபர். இவருக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகளாக குழந்தை இல்லை. இதனால் இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில், கர்ப்பப்பை குழாய்களில் அடைப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறி அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று சொல்லியுள்ளனர். அதனை அடுத்து, நேற்று முன்தினம் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்த நிலையில், அதிகாலையில் ஜெனிபர் உயிரிழந்ததாக அவரது உறவினர்களுக்கு தெரிய வந்ததை தொடர்ந்து, உறவினர்கள் ஏராளமானோர் தவறான சிகிச்சையால் ஜெனிபர் இறந்ததாக கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த்தும், விழுப்புரம் நகர போலீசார் ஏராளமானோர் மருத்துவமனையில் குவிக்கப்பட்டு, மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மருத்துவர்கள் சிகிச்சையில் எந்த தவறும் இல்லை. அவருக்கு உடலில் ஏற்கனவே இருந்த சர்க்கரையை நோய் காரணமாக உயிர் இழந்திருக்கலாம், உடலை அறுவை சிகிச்சை செய்து எங்கே தவறு நடந்தது என்று தெரிந்து கொள்ளலாம், என்று தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையில் இருந்து உடலை வாங்க மறுத்து மீண்டும் உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.