டிரைவர்கள் உள்பட 10 பேர் படுகாயம்
திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் பக்கம் தனியார் சொகுசு பஸ்சும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், லாரி-பஸ்களின் டிரைவர்கள் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
நேற்று முன்தினம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் கூட்டு பாதை அருகே வந்து கொண்டிருந்த தனியார் சொகுசு பஸ்சும், எதிரே வந்த லாரியும் ஒன்றையொன்று கடந்து செல்ல முயன்றபோது எதிர்பாராமல் திடீரென நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில், விபத்தில் சொகுசு பஸ் ஓட்டுனர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சிங்கார வேலன் (வயது 32), மாற்று டிரைவர் சிவகங்கை பகுதியைச் சேர்ந்த கண்ணன் (38), நடத்துனர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இருதயம் (42), லாரி ஓட்டுநர் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ்குமார் ஆகியோர் பஸ்சில் இருந்த 6 பேர் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதல் சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக அனைவரும் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து, ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.