தர்மபுரி மாவட்ட மறுமலர்ச்சி திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நாயக்கன் கொட்டாய் கிராமத்தில் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பழனி தலைமை வகித்தார்.
மாவட்ட துணைச் செயலாளர் பட்டு ராஜா,தருமபுரி வடக்கு ஒன்றிய செயலாளர் முனுசாமி,தருமபுரி நகர செயலாளர் பட்டு சுப்ரமணி,மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் அருண்குமார்,ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டத் துணைச் செயலாளர் ஆதிமூலம் வரவேற்று பேசினார்.கூட்டத்தில் மாநில தீர்மான குழு செயலாளர் கவிஞர் மணிவேந்தன், மாநில மாணவரணி செயலாளர் பாலா சசிகுமார்,
தர்மபுரி மாவட்ட செயலாளர் ராமதாஸ்,மாவட்ட அவைத்தலைவர் கோவிந்தராஜ்,தலைமை செயற்குழு உறுப்பினர் குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். இக்கூட்டத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு தமிழ் மொழி காக்க உயிர் நீத்த தியாக வேங்கைகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினரும் தருமபுரி நாடாளு மன்ற தொகுதி இணைய தள பொறுப்பாளருமான குமரவேல்,ஒன்றிய செயலாளர்கள் நல்லம்பள்ளி சிவராமன்,பாப்பிரெட்டிப்பட்டி சுகவனம், அரூர் முருகேசன்,வேலாயுதம்,மொரப்பூர் ஜெகநாதன்,கடத்தூர் லியாகத், காரிமங்கலம் முனுசாமி, நஞ்சுண்டன் பொதுக்குழு உறுப்பினர்கள் ராவணன்,வேல்முருகன் மற்றும் இளைஞர் அணி,விவசாய அணி,இலக்கிய அணி, தொண்டர் அணி,மகளிர் அணி உள்ளிட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் சங்கர் நன்றி கூறினார்.