முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி
கடலூர் மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, இலவச வீட்டுமனைப் பட்டா பெற்றவர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன், மாவட்ட ஆட்சியர் தலைவர் அ.அருண் தம்புராஜ் ஆகியோர் கடலூர் மாவட்டங்கள் முழுவதும் விருதாச்சலம் சிதம்பரம் கடலூர் கோட்டங்களுக்கு உட்பட்ட பயனாளிகளை தேர்வு செய்தனர்.
முதல்வரின் ஆணைக்கிணங்க பல்வேறு கட்ட முகாம்களின் மூலம் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் வீட்டுமனைப் பட்டா பெற்ற பயனாளிகளுக்கு இலவச வீடுகள் கட்டிதருவதற்கு பல்வேறு துறைகள் மூலம் உரிய நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் 350 பயனாளிகளுக்கும், சமத்துவபுரம் திட்டத்தின் கீழ் 848 பயனாளிகளுக்கும், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் 3,359 பயனாளிகளுக்கும், விளிம்பு நிலையில் உள்ள 1,767 பழங்குடியின பயனாளிகளுக்கும், சுனாமியால் பாதிக்கப்பட்ட 4,272 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாவிற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வீடு கட்டி குடியிருந்து வரும் 8,138 பயனாளிகளுக்கு இ-பட்டாக்களும், ஆதிதிராவிட நலத்துறை மூலம் காலிமனை இ-பட்டா 2,660 பயனாளிகளுக்கும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் வீடு கட்டி குடியிருந்து வரும் 832 பயனாளிகளுக்கு இ-பட்டாக்களும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் காலிமனை இ-பட்டா 849 பயனாளிகளுக்கும் ஆணை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 1.4.2023 முதல் 22.1.2024 வரை 3,956 பயனாளிகளுக்கு
பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது.
குறிஞ்சிப்பாடி வட்டத்தில் இலவச வீட்டுமனை பெற்ற பாக்கியம் தெரிவித்தாவது:
கலைஞர் நூற்றாண்டு விழா பட்டா வழங்கும் முகாமில் எனக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இலவச மனைப்பட்டா வழங்கி. எங்களது சொந்த வீடு கனவை நிறைவேற்றிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு எனது சார்பாகவும், எங்களது குடும்பத்தின் சார்பாகவும் கோடானகோடி நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.