முகப்பேர் ஏரித்திட்டம் ஆறாம் முதன்மைச் சாலையில் உள்ள மருதம் அடுக்ககத்தில் 75-வது குடியரசு தின விழா நடைபெற்றது. ஓய்வுபெற்ற பேராசிரியர் முனைவர் இறையரசன் தலைமையேற்றுத் தேசியக்கொடி ஏற்றினார்.
குடியிருப்பின் தலைவர் பாக்கியம், நாடும் வீடும் காக்க உடற்பயிற்சி தேவை, அடுக்ககத்தில் வாரம்தோறும் யோகா வகுப்புகள் நடைபெறும் என்று கூறினார்.
சிறுவன் வருண் “வந்தேமாதரம்” பாடலுக்கு நடனம்
ஆடினான். குழந்தைகள் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. செயலர் செந்தில் விழா ஏற்பாடுகளை செய்திருந்தார்.