சூரியின் அடுத்த படம் ‘கருடன்’காமெடி நடிகரான சூரி ‘விடுதலை’ படத்தில் கதாநாயகனாக நடித்தார். அப்படம் மிகப் பெரிய வெற்றியை தழுவியது. நடிகர் சூரி தற்போது ‘விடுதலை 2‘ படத்திலும் கதாநாயகனாக நடித்து முடித்துள்ளார்.
சூரி ‘கருடன்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் சசிகுமார், உன்னி முகுந்தன் முதன்மை வேடத்தில் நடிக்கின்றனர். படத்தின் கதையை இயக்குனர் வெற்றிமாறன் எழுத துரை செந்தில் குமார் இயக்கி உள்ளார்.
ஷிவதா, ரோஷினி, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் கிளிம்ஸ் வீடியோவான அறிமுக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
செங்கல் சூளையில் கம்பீரமாக அமர்ந்துள்ளனர் சசிகுமார், உன்னி முகுந்தன். அங்கே தவறு செய்த சிலர் அருகில் இருக்க அதிலிருந்து ஒருவர் தப்பித்து ஓடுகிறார். அவரை சூரி பிடிப்பது போன்று வீடியோ உள்ளது.
வீடியோவில் ‛‛விஸ்வாசத்துல மனுஷங்களுக்கும் நாய்க்கும் போட்டி வந்தாஎப்பவும் நாய் தான் ஜெயிக்கும். அதே நாய்க்கும் சொக்கனுக்கும் போட்டிவந்தா ஜெயிக்கிறது. என்னைக்குமே சொக்கன் தான்” என்ற வசனம் சொககன் வேடத்தில் நடிக்கும் சூரியையும், அவரின் விஸ்வாசத்தையும் குறிப்பிட்டுள்ளது.