அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்
மேல்மலையனூரில் இருந்து செஞ்சி வழியாக சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு விழா பேருந்து நிலையத்திற்கு புதிய வழித்தடத்தில் பஸ் சேவையை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மேல்மலையனூரில் இருந்து வடபாலை, செவலபுரை, செஞ்சி, வழியாக புதிய வழித்தடத்தில் புதிய பேருந்து சேவையை செய்து தர வேண்டி அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கையினை ஏற்று மேல்மலையனூரில் இருந்து செஞ்சி வழியாக சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு புதிய பேருந்து சேவை இயக்கம் தொடக்க விழா நிகழ்ச்சி செஞ்சி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்டம் துணை மேலாளர் இயக்கம் கார்த்திகேயன் தலைமை வகித்தார். செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் புதிய அரசு பேருந்து சேவையை தொடங்கிவைத்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில் செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார், நகர செயலாளர் கார்த்திக், செஞ்சி பணிமனை மேலாளர் சுரேஷ், தொ.மு.ச பொதுச் செயலாளர் லூர்து இமானுவேல், தொ.மு.ச. நிர்வாகிகள்ஹரி கிருஷ்ணன், தியாகராஜன் காதர் நவாஸ், தமிழ்மணி, ராஜேந்திரன், பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் சீனிவாசன், நூர்ஜகான் ஜாபர், லட்சுமி வெங்கடேசன், புவனேஸ்வரி அண்ணாதுரை, வர்தகர் சங்க பொருளாளர் அம்ஜத் பாண்டே, தொண்டரணி பாஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.