திருவண்ணாமலை பி.எம். ஸ்ரீகேந்திரிய வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் சிறந்த ஓவியங்களை வரைந்த மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை பி.எம். ஸ்ரீகேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர்களின் தேர்வு நேர மன அழுத்தத்தை போக்க சிறப்பு ஓவியப்போட்டி நடைபெற்றது. இதில் கேந்திரிய வித்யாலயா, ஜீவாவேலு, எஸ்.ஆர்.ஜி.டி.எஸ். பாத் குளோபல், மகரிஷி வித்யா மந்திர் ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.
சிறந்த ஓவியங்களை வரைந்த பி.எம். ஸ்ரீகேந்திரிய வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் திருமுருகன், ஹரிஹரன், எஸ்.ஆர்.ஜி.டி.எஸ். பள்ளியைச் சேர்ந்த தருணா, காமாட்சி தேவி, ஜீவாவேலு பள்ளியைச் சேர்ந்த ஹரிதா ஆகியோருக்கு திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி பேராசிரியர்கள் முருகன், சுரேஷ்குமார் மற்றும் ஓவிய ஆசிரியர் வடிவேல் ஆகியோர் பாராட்டுச் சான்றிதழ், பரிசுகளை வழங்கினர்.
போட்டியில் கலந்துகொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. இதில் பள்ளி முதல்வர் ரீமாஸ்டெல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஓவிய ஆசிரியர் திவ்யா சுக்லா நன்றி கூறினார்.