திருவண்ணாமலை எஸ்.கே.பி பொறியியல் கல்லூரி, எஸ்.கே.பி கலை (ம) அறிவியல் கல்லூரி மற்றும் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்திய, இந்திய விமானப்படையில் மாணவர்களுக்கான வேலை வாய்ப்புகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்விக் குழும வளாகத்தில் நடைபெற்றது.
எஸ்.கே.பி கல்வி குழுமத்தின் தலைவர், பொறியாளர் கு.கருணாநிதி தலைமை வகித்தார். இணை செயலாளர் கே.வி.அரங்கசாமி மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர் ஆர்.சக்தி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக திருவண்ணாமலை மாவட்ட இளநிலை வேலை வாய்ப்பு அதிகாரி மோகன்ராஜ், சென்னை தாம்பரத்தில் இயங்கி வரும் இந்திய விமானப்படை ஆள் சேர்ப்பு மைய அதிகாரி கனிகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.
சிறப்பு விருந்தினர்களுக்கு எஸ்.கே.பி பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ்.பாஸ்கரன், எஸ்.கே.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் ஆர்.எஸ்.வெற்றிவேல் ஆகியார் புத்தகங்கள் வழங்கி கவுரவித்தனர். பிஆர்ஓ. சையத் ஜஹிருத்தீன் கலந்து கொண்டார். கனிகுமார், இந்திய விமானப்படை குறித்தும், விமானப்படையில் மாணவர்களுக்கான வேலை வாய்ப்புகள், அதற்கு எவ்வாறு தயார்படுத்திக் கொள்ளவது என்பன குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.
நிகழ்வில், எஸ்.கே.பி கலை (ம) அறிவியல் கல்லூரியின், கணினி அறிவியல் துறையின் தலைவர், பேராசிரியர் பால்ராஜ் ஆனந்த் வரவேற்றார். ஆங்கிலத்துறை பேராசிரியர் சேவியர் நன்றி கூறினார். அனைத்துத்துறை பேராசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்றனர்.