விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மரக்காணம் சாலையில் உள்ள ஐ.ஜே.கே. கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விழுப்புரம் மாவட்ட கட்டிட தொழிலாளர்கள் சங்கத்தை சேர்ந்த மேஸ்திரிகள் சுமார் 500 பேர் ஐ.ஜே.கே. தொழிலாளர்கள் பேரவையில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு ஐ.ஜே.கே. தொழிலாளர்கள் பேரவையின் மாநில அமைப்பு செயலாளர் ஆலங்குப்பம் பாலா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர், பேரவையின் அகில இந்திய கெளரவ தலைவர் டாக்டர் ஆனந்தமுருகன் சிறப்புரையாற்றினார்.
மாநில மகளிர் அணி செயலாளர் உஷா மற்றும் விழுப்புரம் மாவட்ட இரும்பு கடை உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் மாவட்ட தலைவர் சய்யதுசுலைமான், செயலாளர் இம்ரான்கான் மற்றும் சங்க உறுப்பினர்கள், நிர்வாகிகள் வழக்கறிஞர் மாரி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.