ரூ. 60 லட்சம் இழந்த முன்னாள் ராணுவ வீரர் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
புதுச்சேரியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் இணைய வழி வர்த்தகத்தில் இழந்த ரூ.60 லட்சத்தை சைபர் கிரைம் போலீசார் பணத்தை மீட்ட மீட்டனர்.
புதுச்சேரியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சண்முகம் என்பவர் இணைய வழியில் கூடுதல் வருமானத்திற்கு ஆசைப்பட்டு ரூ.60 லட்சம் வரை முதலீடு செய்தார். முதலில் ரூ.600 கிடைத்தது. அதன் பிறகு ஒரு ரூபாய் கூட திரும்ப வரவில்லை. இது குறித்து அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
23 வங்கி கணக்குகளை போலீசார் முடக்கி ரூ.52 லட்சம் மீட்டு அதற்கான காசோலையை அளித்தனர். அதே போல் காரைக்காலைச் சேர்ந்தவர் ராஜராஜ சோழன் (வயது 65). ஓய்வு பெற்ற சுங்கவரி துறை அதிகாரி ஆன்லைனில் வர்த்தகம் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என இணையத்தில் தேடிய போது 10 நாட்களில் பணம் இரட்டிப்பு என்ற இணையவழி விளம்பரத்தை பார்த்து இணைந்துள்ளார்.
youtube பல்வேறு லிங்குகளை அனுப்பி பல வீடியோக்களை பார்க்க சொல்லி இருக்கின்றனர். அந்த வீடியோவில் பணம் முதலீடு செய்கின்ற நபர்களுக்கு 10 நாட்களிலேயே அவர்கள் போடுகின்ற பணம் இரட்டிப்பாக வந்தது போல் அனைத்து வீடியோக்களும் இருந்ததாக கூறினார்.
டிரேடிங் செய்வது சம்பந்தமாக சில நபர்கள் அவருக்கு ஆன்லைன் மூலமாக சொல்லிக் கொடுக்கும் பொழுது அவருக்கு நிறைய லாபம் வருவது போல் காட்டி இருக்கின்றனர்.
இதை நம்பியவர் அவர்கள் போலியாக உருவாக்கி அனுப்பிய டிரேடிங் வெப்சைட்டில் ரூ.1 கோடியே 36 லட்சம் பணத்தை செலுத்திய பிறகு கடந்த 2 மாதங்களாக ஒரு ரூபாய் கூட அவருக்கு வரவில்லை.
ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் கொடுத்த அரை மணி நேரத்தில் முதலீடு செய்த 10 வங்கி கணக்குகளை சைபர் கிரைம் போலீசார் முடக்கி விட்டனர். அவரது பணத்தை மீட்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.