திருவண்ணாமலை எஸ்.கே.பி பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கான செயல் திட்ட விளக்க கண்காட்சி கல்லூரியின் அறிஞர் அண்ணா திறந்த வெளி அரங்கத்தில் நடைபெற்றது.
எஸ்.கே.பி. கல்விக் குழுமத்தின் தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். இணைச் செயலாளர் அரங்கசாமி முதன்மை நிர்வாக அதிகாரி சக்திகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட தமிழ்நாடு மின்சார வாரியத்தை சேர்ந்த உதவி செயற்பொறியாளர்கள் வெங்கடேசன் மற்றும் சங்கர் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். கல்லூரி முதல்வர் பாஸ்கரன் மாணவர்களின் செயல் திட்டத்தின் பயன்பாடுகளை கேட்டறிந்து வாழ்த்துரை வழங்கினார்.
கண்காட்சியில் மாநிலத்தின் பல்வேறு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு 100க்கும் மேற்பட்ட செயல் திட்டங்களை விளக்கினர். பி.ஆர்.ஓ. சையத் ஜஹிருத்தின், துறைத் தலைவர்கள் குபேரன், கார்த்திகேயன், ஸ்ரீதேவி, புருஷோத்தமன், வெங்கடேஷ், ராஜி, ராஜேந்திரன், தனசேகர். துறை பேராசிரியர்கள். மற்றும் பேராசிரியர்கள் முத்தழகன் மற்றும் பால்ராஜ் ஆகியோர் நடுவர்களாக சிறந்த செயல்திட்டத்தினை தேர்வு செய்தனர்.
பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கிடையேயான போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் பரிசினை திருமலா பாலிடெக்னிக் கல்லூரியும், மூன்றாம் பரிசினை விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரியும், பள்ளி மாணவர்களுக்கிடையேயான போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் பரிசினை எஸ்.கே.பி.வனிதா பன்னாட்டு பள்ளியும், மூன்றாம் பரிசினை மவுண்ட் செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியும் பெற்றனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, பேராசிரியர்கள் தினேஷ்பிரபு, கருணாகரன், சுரேஷ், ரமேஷ், சரண்குமார், மீனா மற்றும் பல்வேறு துறைப்பேராசிரியர்கள் செய்திருந்தனர்.