வந்தவாசி அடுத்த காரணை கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.
முன்னதாக விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரகம்ஹோமம், கஜபூஜை, லட்சுமி ஹோமம், தனபூஜை, கோபூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மேல்மருவத்தூர் மக்கள் தொண்டு இயக்கத் தலைவர் கோ.ப. அன்பழகன் முன்னிலையில் கலசத்தின் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
இதில் முன்னாள் எம்பி துரை, முன்னாள் எம்.எல்.ஏ. கணேஷ் குமார், மாம்பட்டு முத்துமாரியம்மன் கோவில் சக்தி உபாசகர் லட்சுமணன் சுவாமி, ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி சுப்பிரமணி மற்றும் தென் சேந்தமங்கலம், அமையப்பட்டு, மும்முனி தெள்ளூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.