திண்டிவனம் அருகே 5 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிறு பாலம் மற்றும் பேரணி பெரியதச்சூர் ஒருவழிச் சாலையை இடைவழிச் சாலையாக அகலப்படுத்தி உறுதிப்படுத்தும் பணிக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
விழுப்புரம் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் திண்டிவனம் தொகுதி ஒலக்கூர் ஒன்றியம் தாதாபுரம் ஊராட்சியிலிருந்து அமணப்பாக்கம் சாலையில் 6 கண்கள் கொண்ட சிறுபாலம் அமைக்கவும், மயிலம் ஒன்றியம் பேரணியில் இருந்து பெரிய தச்சூர் செல்லும் ஒரு வழித்தட சாலையை இடைவழி சாலையாக அகலப்படுத்தி உறுதிப்படுத்தும் பணிக்கு பூமி பூஜை விழா தாதாபுரம் ஊராட்சி கீழ் மலையனூர் பகுதியில் நடைபெற்றது.
நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சிவ சேனா தலைமையில்
ஒலக்கூர் ஒன்றிய பெருந்தலைவர் சொக்கலிங்கம், துணை சேர்மன் ராஜாராமன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்
சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 5 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 6 கண்கள் கொண்ட சிறுபாலம் அமைக்கவும், பேரணி – பெரிய தச்சூர் சாலையை இடைவழிச்சாலையாக அகலப்படுத்தி, உறுதிப்படுத்தும் பணிக்கு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து தாதாபுரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையையும் தாதாபுரம்அரசு நடுநிலைப் பள்ளியில் செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவு மையத்தினை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் .
அப்பொழுது முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு அமைச்சர் சாப்பிட்டு பார்த்து ஆய்வு மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து தாராபுரம் செல்லும் குறுகிய ஏரிக்கரை சாலை பகுதியை அகலப்படுத்துவதற்கு துறை சார்ந்த அதிகாரியுடன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் டாக்டர் சேகர், பொதுக்குழு உறுப்பினர் சாந்தி ஏழுமலை,மாவட்ட கவுன்சிலர் மனோ சித்ரா ராஜேஸ்வரன், பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் ராமு, உதவி பொறியாளர் தீனதயாளன்உள்ளிட்டோர் உடன் இருந்தனர்