சேலத்தில் நடைபெறவுள்ள இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு சுடர் ஓட்டத்திற்கு மயிலம் தொகுதி சார்பில் கூட்டேரிப்பட்டில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
சேலத்தில் வரும் 21-ம் தேதி இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு நடைபெறுவதையொட்டி கழக இளைஞர் அணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இருந்து சேலத்திற்கு சுடர் ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.
சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, மதுராந்தகம் வழியாக விழுப்புரம் வடக்கு மாவட்டம், மயிலம் சட்ட மன்ற தொகுதி, மயிலம் ஒன்றியம், கூட்டேரிப்பட்டுக்கு வந்தடைந்த சுடர் ஓட்டத்தை, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
சுடரை ஏந்தி வந்த இளைஞர் அணி நிர்வாகிகள் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளரும், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் ஒப்படைத்த பின் இளைஞர் எழுச்சி வீரவணக்க கோஷங்களை எழுப்பினர். பின்னர் அங்கிருந்து சுடர் ஓட்டத்தை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் இரா.மாசிலாமணி, வழக்கறிஞர் சேதுநாதன், மாவட்ட அவைத் தலைவர் டாக்டர் சேகர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், செண்டூர் ராமமூர்த்தி, மயிலம் ஒன்றிய பெருந்தலைவர் யோகேஸ்வரி மணிமாறன், ஒன்றிய செயலாளர்கள் மணிமாறன், அண்ணாதுரை செழியன், துரை, இளம்வழுதி, மாவட்ட கவுன்சிலர் விஜயன், மாவட்ட சிறுபான்மையினர் அணி அன்சாரி, கூட்டேரிப்பட்டு இனாயத்துல்லா, ஜனார்த்தனன், ஐஸ் ராஜா, சு.வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.