வந்தவாசி அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் மறுநாள் திருமணம் நடக்க இருந்த நிலையில் திடீரென மாயமானார்.
இவர் வீட்டிலிருந்து பி ஏ தபால் வழி கல்வி படித்து வருகிறார். இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த உறவினர் ஒருவருக்கும் நாளை திருமணம் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிலையில் கடந்த 14-ம் தேதி அன்று பொங்கல் பண்டிகைக்காக பொருட்களை வாங்க தாய் தந்தை இருவரும் வந்தவாசிக்கு சென்று விட்டு பின்னர் வீடு திரும்பி உள்ளனர். அப்போது வீட்டில் இருந்த இளம்பெண் காணவில்லையாம். உறவினர் தெரிந்தவர்கள் வீட்டில் தேடியும் கிடைக்காததால் இளம் பெண்ணின் தாய் வந்தவாசி வடக்கு போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார்.
போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராம்குமார் வழக்கு பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை வலைவீசி தேடி வருகிறார். மறுநாள் திருமணம் நடக்க இருந்த நிலையில் இளம்பெண் திடீரென மாயமானது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.