வி.சி.க. ஒன்றிய செயலாளர் மீது தாக்குதல் 5 பேர் மீது வழக்கு பதிவு
வந்தவாசி அடுத்த தெள்ளார் பாஸ்புட் கடையில் ரைஸ் வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் வி.சி.க. ஒன்றிய செயலாளர் ஞானபிரகாசத்தை தாக்கியதாக 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வந்தவாசி அடுத்த மீசநல்லூர் கிராமத்தைச்சேர்ந்தவர் ஞானபிரகாசம் (வயது 45). தெள்ளார் மத்திய ஒன்றிய வி.சி.க. செயலாளர். இவரது உறவினர் கலைவாணன் (42) சென்னை தனியார் மருத்துவமனையில் ரத்தபரிசோதகராக பணிபுரிகிறார்.
2 நாட்களுக்கு முன் இருவரும் தெள்ளாரில் உள்ள ஒரு பாஸ்புட் கடையில் ரைஸ் வாங்க சென்றுள்ளனர். அப்போது தெள்ளாரை சேர்ந்த பாண்டியன் (21) மற்றும் அடையாலம் தெரிந்த பெயர் தெரியாத 2 நபர்கள் ரைஸ் வாங்க நின்றுகொண்டு இருந்தார்கள். அப்போது கலைவாணன் 3 ரைஸ் 5 பார்சலான பிரித்து தரும்படி கேட்டுள்ளார்.
அப்போது அங்கு இருந்த வாலிபர்களுக்கும் பாண்டியனுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில் கலைவாணன் என்பவர் வந்தவாசி அருகே பாஸ்புட் ரைஸ் வாங்குவதில் தகராறு ஹெல்மெட்டால் பாண்டியனை தாக்கியதாக கூறப்படுகிறது. பாண்டியனுடன் வந்த வாலிபர்கள் பதிலுக்கு தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த ஞானபிரகாசம், கலைவாணன், பாண்டியன் ஆகியோர் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக ஞானபிரகாசம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். சம்பவம் குறித்து இருதரப்பினரின் புகாரின் பேரில், தெள்ளார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியா 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்.