அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் ஆன்மீக ஊர்வலம் சென்றனர்
செய்யாறு திருவோத்தூர் பகுதியில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பாடல்களை பாடியபடி ஊர்வலமாக சென்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு திருவோத்தூர் பகுதியில் இருந்து ஆஞ்சநேயர் கோயில் வரை ஆன்மீக ஊர்வலம் நடைபெற்றது.
முன்னதாக சன்னதி தெருவில் உள்ள ராமர் கோயிலில் சிறப்பு பஜனைகள் பாடப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு ராமர் பஜனை பாடல்களை பாடி கோஷமிட்டு ஆடி பாடி ஆன்மீக ஊர்வலமாக சன்னதி தெருவில் இருந்து வேதபுரீஸ்வரர் ஆலயம் வழியாக ஆஞ்சநேயர் கோயில் வரை ஆன்மீக ஊர்வலம் நடைபெற்றது.
செய்யாறு நகர பாஜக தலைவர் வெங்கட்ராமன் தலைமையில் பாஜக நிர்வாகிகள் மற்றும் ஆன்மீக பக்தர்கள் இணைந்து அயோத்தி நகரில் நடைபெற உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஆன்மீக ஊர்வலத்தை நடத்தினர் முடிவில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.